செய்திகள்வணிகம்

வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி வரை அவகாசம்! மத்தியஅரசு

117views

கொரோனா தொற்று பரவல் காரணமாக, வருமான வரித்தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை காலக்கெடு அறிவித்துள்ளது மத்தியஅரசு.

நாடு முழுவதும் 2வது தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய தேதியை செப்டம்பர் 30 வரை இரண்டு மாதங்கள் நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

2020-2021 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள். கம்பெனிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாள். இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.

அதன்படி, தனிநபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தற்கான கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரையும், கம்பெனிகள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம்-16 அளிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!