”ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் பதவியை அபகரிப்பதற்காக, என் தந்தை லாலு பிரசாத்தை சிலர் டில்லியில் பிணைக் கைதியாக வைத்துள்ளனர்,” என, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் குற்றம்சாட்டியுள்ளார்.கூட்டணி ஆட்சிபீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில எதிர்க்கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார்.லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாபுக்கும், தேஜஸ்விக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.இந்நிலையில், தேஜ் பிரதாப் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:என் தந்தை லாலு பிரசாத், சிறையில் இருந்து ஏப்ரலில் வெளியேறினார்.
அது முதலே அவர் டில்லியில் தங்க வைக்கப்பட்டுஉள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் பதவியை அபகரிக்கும் நோக்கத்தில், அவரை பீஹார் வர விடாமல் சிலர் பிணைக் கைதியாக வைத்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.இது குறித்து, லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:லாலு பிரசாத் யாதவ், பீஹார் முதல்வராக பல ஆண்டுகள் பதவி வகித்துஉள்ளார். மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இரண்டு முன்னாள் பிரதமர்களை தேர்ந்தெடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர்.உத்தரவு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கைது செய்யும்படி உத்தரவிட்டவர். இப்படிப்பட்ட குணநலன்களை உடைய ஆளுமையான லாலு பிரசாத்தை, யாரும் பிணைக் கைதியாக வைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.