தமிழகம்

ரூ.14.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்: முதல்வர் ஸ்டாலின் இன்று திறப்பு

71views

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.14.50 கோடியில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உட்பட பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

சென்னை கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.14.50 கோடியில் ‘கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்’ அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மொத்தமுள்ள 5.38 லட்சம் சதுரஅடி பரப்பளவில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம், பேருந்து நிறுத்தம், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகள் இந்த பணிகள் நடைபெற்று வந்தன. கரோனா பாதிப்பு காரணமாக இந்த பணிகள் முடங்கின.

அதன்பிறகு இந்த பணிகள் தொடங்கி நடைபெற்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதியன்று இந்த இடங்களை நேரில் வந்து ஆய்வு செய்தார்.

மேலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தற்போது ‘கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்’ அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டக்கு இன்று தொடங்கி வைக்கிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!