உலகம்

ரூபிளை பயன்படுத்துவதா…ரஷ்யாவின் அறிவிப்பு சாத்தியமில்லை: மக்ரோன் கண்டனம்!

55views

ரஷ்ய எரிவாயுவை வாங்குவதற்கு இனி மேற்கு நாடுகள் ரூபிளை பயன்படுத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் புதிய நிபந்தனைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேற்கு மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிசக்தி விற்பனையாளரான ரஷ்யா, தங்கள் நாட்டில் இருந்து வாங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு இனி மேற்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய நாணயமான ரூபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அறிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைளை எதிர்த்து மேற்கு நாடுகள் பலவும் பல்வேறு பொருளாதார தடையை விதித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா இந்த உத்தரைவை பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில், ரஷ்யாவின் இந்த உத்தரவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயு பொருள்களை வாங்குவதற்கு மேற்கு நாடுகள் ரூபிளை பயன்படுத்த வேண்டும் என்கிற அறிவிப்பு சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மக்ரோனின் ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான தொலைப்பேசி அழைப்பில், உக்ரைன் நகரான மரியுபோலில் இருந்து பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றுவது தொடர்பான தயார் நிலை குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, நேற்று துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ரஷ்யா படைகளின் தாக்குதலை குறைப்பது குறித்து ரஷ்யா ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!