இந்தியா

ராணுவ தளவாட ஏற்றுமதியில் 25 முன்னணி நாடுகள் பட்டியலில் இந்தியா: அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

63views

ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் 25 முன்னணி நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் 2020-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இந்த மையத்தின் பட்டியலில் இந்தியா முதல் முறையாக இடம்பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராணுவ தளவாட ஏற்றுமதி என்பது நமது பாதுகாப்பு திறன்அதிகரித்துள்ளது மற்றும் சர்வதேச தரத்துக்கு இணையான பொருட்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது என்பதைக் காட்டுவதாகும். ராணுவ தளவாட ஏற்றுமதியை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

விமானப்படை பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி மூலம் ரூ.35 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு 2024-25-க்குள் எட்டப்படும் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகள் மட்டுமே ராணுவதளவாட ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த நிலையில், இந்தியாவும் அதில் சேர்ந்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!