இலக்கியம்கவிதை

ராசி அழகப்பன் கவிதைகள்

273views
  • கடல்
கடல்
நீர்த்துகள்களின்
கூட்டுத்தொகை.
உடல்
உணர்வுகளின்
பெருக்கல்தொகை.
அலை
எழுவதும் விழுவதும்
அதன் சிந்தனை.
ஆசை
விரைவதும் உறைவதும்
அதன் பயணம்.
கண்ணீரை அரவணைக்கும்
தன் கண்ணீரை ஒதுக்குவதே
நுரை.
கண்ணீரை வெளியேற்றும்
பிறர் கண்ணீரில் கரையும்
அன்பு.
கடல்
உடல்
எது எனினும்
காலவெளிப் பிம்பங்கள்
வேறென்ன?!

  • திமிங்கலமீன்
மீன்கள்
திமிங்கலங்களை
விழுங்குவது
இன்றைய காட்சிகள்.
மீன்கள்
கரைகளில் நீந்தமுடிவதால்…
கரைகளற்ற கடல்கள்
தடையற்ற மனிதர்கள்
வலைகளோடு மீன்கள்
கனவுகளில்
இனி-
நீர்வீழ்ச்சிக் குளியலுக்கு
ஆன்லைன் ரிசர்வேஷன்.
வியர்வை-
மாடர்ன் ஆர்ட் சட்டகத்தில்..!

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!