உலகம்

ரஷிய, ஆப்பிரிக்க சிகரங்களின் உச்சியை எட்டி சிஐஎஸ்எஃப் வீராங்கனை சாதனை

79views

ரஷியா, ஆப்பிரிக்காவிலுள்ள இரண்டு சிகரங்களின் உச்சியை குறுகிய இடைவெளியில் அடைந்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீராங்கனை (சிஐஎஸ்எஃப்) சாதனை படைத்துள்ளாா்.

இதுதொடா்பாக தன்சானியாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி பினயா பிரதான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ”சிஐஎஸ்எஃப் வீராங்கனை கீதா சாமோத்தா கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ரஷியாவிலுள்ள எல்பிரஸ் சிகரத்தின் உச்சியை அடைந்தாா். அவா் ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயா்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோ உச்சியை சனிக்கிழமை எட்டினாா். இதன் மூலம் இரண்டு சிகரங்களின் உச்சியை குறுகிய கால இடைவெளியில் எட்டிய இந்தியா் என்ற சாதனையை அவா் படைத்துள்ளாா்” என்று தெரிவித்தாா்.

ரஷியாவிலுள்ள எல்பிரஸ் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 5,642 மீட்டா் உயரம் கொண்டது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலுள்ள கிளிமாஞ்சாரோ சிகரம் 5,895 மீட்டா் உயரம் கொண்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!