உலகம்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு வழங்கப்பட்ட கௌரவ தலைவர் பதவி ரத்து

49views

போலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் 2022-ம் ஆண்டுக்கான உலகக் கோந்பை ப்ளே-ஆப் சுற்று விளையாட்டுகளில் ரஷியாவுடன் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து இன்று 5-வது நாளாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன.

கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர்.

ஏற்கனவே பல்வேறு நாடுகளும் ரஷியா மீது பொருளாதார தடை விதித்து வருகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌரவத் தவைவர் மற்றும் தூதுவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் புதின் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌவரத் தலைவராக இருந்து வந்தார். 2014-ம் ஆண்டு ஜூடோ விளையாட்டின் மிக உயர்ந்த நிலையான எட்டாவது டான் விருதையும் புதின் பெற்றுள்ளார்.

இதேபோல், போலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் 2022-ம் ஆண்டுக்கான உலகக் கோள்பை ப்ளே- ஆப் விளையாட்டுகளில் ரஷியாவுடன் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!