யாஸ் புயல் நேற்று ஒடிசா – மேற்கு வங்க மாநிலத்துக்கு இடையே கரையை கடந்த நிலையில் அதன் தீவிரத்தால் 1,200க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று கரையை கடந்த யாஸ் புயல் உடனடியாக வலுவிழந்தாலும் கூட அதன் தாக்கம் அடுத்த 12 மணி நேரத்திற்கு இருக்கும் என கூறப்படுகிறது.
புயலால் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 1,200 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஒடிசாவில் 120 கிராமங்கள் மழைநீர் மற்றும் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
யாஸ் கரையை கடந்த போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மின்சாரம் சேவை கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.