சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலிக்கான நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது, அவர் இப்போது வியாழக்கிழமை அணியில் சேரத் தயாராகிவிட்டார்.
ஊடக அறிக்கைகளின்படி, 34 வயதான இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இந்தியா செல்வதற்கான விசா ஆவணங்களைப் பெற்றுள்ளார் என்பதை சிஎஸ்கே மற்றும் மொயின் அலியின் குடும்பத்தினர் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர் நேற்று தனது ஆவணங்களை எடுத்துக்கொண்டு இந்தியா வரத் தயாராகிவிட்டார்” என்று மொயீன் அலியின் தந்தை முனீர் அலி கூறியதாக கிரிக்பஸ்ஸால் மேற்கோள் காட்டப்பட்டது.
“அவர் மாலையில் மும்பைக்கு வருவார், உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்” என்று சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறினார்.
முன்னதாக, மொயீன் அலி குறித்து, “அவருக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. நாங்கள் பிசிசிஐயுடன் தொடர்பு கொண்டுள்ளோம். பிசிசிஐயும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அவர் எப்போது வருவார் என்பதைப் பொறுத்தே அவர் எத்தனை போட்டிகளைத் தவறவிடுவார் என்று தெரியும். தற்போது, முதல் ஆட்டத்தை அவர் இழக்க நேரிடும். நாளைக்கு வந்தாலும் முதல் ஆட்டம் ஆட முடியாது. அதுதான் இன்றைய நிலை. அவர் பேக் செய்து தயாராக இருக்கிறார். விசா கிடைத்த உடனேயே, அடுத்த விமானத்தில் இந்தியா வந்துவிடுவார்,” என்று காசிவிஸ்வநாதன் கூறிய நிலையில் இப்போது மொயீன் அலி அணியுடன் இணையவுள்ளார்.