இந்தியா

மே 31 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு – மத்திய உள்துறை அமைச்சகம்!

74views

ரடங்கு நீட்டிக்கப்பட்டு மே 31 வரை செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையில், இவை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவறுத்தியுள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிகமாகவே புதிய தொற்றுகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் அதிகமான உயிரிழப்புகள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், மே மாதம் 31-ஆம் தேதி வரையிலும் தற்பொழுது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இந்த மாதம் முழுவதும் கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்கள் முறையாக இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .

மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில கடந்த ஒரு வாரத்தில் 10% அல்லது அதற்கும் மேல் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்கள் அடையாளம் காண வேண்டும் எனவும், 60 சதவீதத்திற்கும் அதிகமான படுக்கை வசதி கொண்ட மாவட்டங்களை அடையாளம் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரு அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் மட்டும் உள்ளூர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக எடுப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!