இந்தியாசெய்திகள்

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகு வன்முறை: எஸ்சி, மகளிர் ஆணையத்துக்கு 600 கல்வியாளர்கள் கடிதம்

60views

”மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை குறித்துவிசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தி மனித உரிமைஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மகளிர் ஆணையத்துக்கு 600 கல்வியாளர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல்காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. முதல்வராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார். கடந்த மாதம் 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மேற்கு வங்கத்தில் வன்முறை வெடித்தது.

குறிப்பாக பாஜக.வுக்கு தேர்த லில் ஆதரவு திரட்டியவர்கள், தாழ்த் தப்பட்டோர், பெண்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு பயந்து ஊரை காலி செய்து விட்டு சென்றுள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸ் தொண் டர்கள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்று பாஜக குற்றம் சாட்டியது. இதற்கிடையில், வன் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் கண்டித்தார்.

இந்நிலையில், மேற்கு வங்கவன்முறை குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள்ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மகளிர் ஆணையத்துக்கு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள், டீன்கள் என 600 பேர் இணைந்து கையெழுத்திட்டு கடிதம் அனுப்பிஉள்ளனர். அதில் கூறியிருப்ப தாவது:

மேற்கு வங்கத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தேர்தலுக்குப் பிறகு பெரும் வன் முறை ஏற்பட்டுள்ளது. பெண்கள் உட்பட 12-க்கும் மேற்பட்டோர் வன்முறையால் உயிரிழந்தள்ளனர். மாநிலத்தில் திரிணமூல் கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

திரிணமூல் கட்சியினரால் ஏரா ளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. பலருடைய வாழ்வாதாரம் பறி போய் உள்ளது.

ஆளும் திரிணமூல் கட்சியின ருக்கு பயந்து, உயிருக்கு பயந்து ஆயிரக்கணக்கானோர் அண்டை மாநிலங்களான அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். சட்டம்ஒழுங்கை பாதுகாக்க வேண்டியபோலீஸார், உள்ளூர் நிர்வாகத்தினர், சிவில் சொசைட்டி, ஊடகம் என எந்த அமைப்பும் வன்முறையாளர்களைப் பற்றி பேச மறுக்கின்றனர். இதுகுறித்து நாட்டின் 3 முக்கிய அமைப்புகளும் விசாரணை நடத்த வேண்டும்.

சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி மக்கள் மீது வன்முறைகளை ஏவி விடுவது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருக்கிறது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் தொடர்ந்து பாதிக்கப்படுவதும் அவர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட முடியாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது. எனவே, வன்முறை குறித்து தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

மேற்கு வங்க வன்முறை குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றமும் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேலும், வன்முறைக்கு பயந்துவெளிமாநிலங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் மேற்கு வங்கத்துக்கு திரும்புவதை உறுதிப்படுத்த 3 பேர் குழுவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தேர்தல் வன் முறை குறித்து ஜூன் 1 முதல் 3-ம் தேதி வரை ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!