புதுப்படம் ஒன்றில் முதல்வர் மகளாக நடிக்கிறார் நயன்தாரா.
மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘லூசிபர்’ படம் தெலுங்கில் மறுபதிப்பாகிறது. மோகன்ராஜா இயக்கும் இந்தப் படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார்.
200 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இந்நிலையில், மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்திருந்த மாநில முதல்வரின் மகள் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாகத் தகவல். அதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இரண்டு மாதங்களுக்கு முன்பே நயன்தாராவை அணுகியபோது அவர் கேட்ட சம்பளம் காரணமாக பேச்சுவார்த்தை முறிந்தது. பின்னர் கொரோனா விவகாரத்தால் படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்புத் தரப்பு மீண்டும் நயன்தாராவை அணுக, அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்.