உலகம்

மின் உற்பத்தி நிலையம் மூடல்: இருளில் மூழ்கியது லெபனான்

42views

லெபனானில் எரிபொருள் தட்டுப்பாடால், இரண்டு பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த நாடே இருளில் மூழ்கி உள்ளது.மேற்காசிய நாடான லெபனான் பல ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. கடும் வீழ்ச்சிஅமெரிக்க டாலருக்கு நிகரான லெபனானின் நாணய மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் எரிபொருள் ஏற்றுமதியை நம்பி இருக்கும் லெபனான் மின் வாரியம், தற்போது பெரும் சவாலை சந்தித்து வருகிறது. இந்த மின் வாரியம் 11 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஆண்டுதோறும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடால் நாட்டில் இயங்கும் இரண்டு பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.

இதனால் 270 மெகாவாட் மின்சாரத்திற்கும் குறைவாகவே மொத்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த நாடே இருளில் மூழ்கி உள்ளது.மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் இடங்களில் மின்சாரம் இல்லாததால், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.லெபனானில் இதுவரை தினமும் மூன்று முதல் ஆறு மணி நேரம் வரை மட்டுமே மின் தடை இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மின் உற்பத்தி நிறுத்தத்தால், இனி ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நெருக்கடிஇந்த நெருக்கடியை சமாளிக்க, ஈரானில் இருந்து எரிபொருளை லெபனான் அரசு இறக்குமதி செய்துள்ளது.ஈராக், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகளிடமும் உதவி கோரப்பட்டுள்ளது.இதற்கிடையே, மானியம் நிறுத்தப்பட்டுள்ளதால், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வினியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.கடந்த மார்ச்சிலும் இதுபோல் லெபனானில் மின் தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!