84views
மிசோரத்தின் லுங்லேய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து தேசிய நில ஆய்வு மையம் கூறியது:
மிசோரத்தின் லுங்லேய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.7 அலகுகளாக பதிவானது. லுங்லேய் மற்றும் அதனையொட்டிய பகுதிகளிலும் நில அதிா்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.