பொலிவியா தலைநகர் லா பாஸ்-ன் மேற்கு பகுதியில் உள்ள இலிமானி மலையில் கொட்டிக் கிடக்கும் பனிக்கு மத்தியில் மூன்று நாட்கள் பயணித்த ஜோடி ஒருவழியாக திருமணத்தை முடித்துள்ளது.
அங்கும் கொரோனா விதிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டதோ என்னவோ குறைந்த அளவிலானோர் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டு உறைபனிகளை தூவி வாழ்த்தினர்.
இதுகுறித்து அகுஸ்டின் கோன்சலேஸ் கூறுகையில், “இந்த திருமண ஜோடி இயற்கை ஆர்வலர்கள், மலை ஆர்வலர்கள். அந்த காரணத்திற்காக, அவர்கள் இந்த மலையின் உச்சியில் தங்கள் திருமண சபதத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். சரி, நாங்கள் சொர்க்கத்திற்கு மிக அருகில் இருக்கிறோம், கடவுளுக்கு நெருக்கமாக இருக்கிறோம், இலிமானி மலை உச்சியில் இருந்து அவர் உங்களை ஆசீர்வதிக்கிறார்” எனக் கூறினார்.
இந்த ஜோடி கடல் மட்டத்திலிருந்து 6,439 மீட்டர் (21,125 அடி) உயரத்தில் திருமணம் செய்து கொண்டது.