இந்தியாசெய்திகள்

மருந்துகள் முதல் கருவிகள் வரை… கொரோனா சிகிச்சை செலவைக் குறைக்க ஜிஎஸ்டி சலுகைகள்!

183views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்து பொருட்கள், கருவிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. உடலிலுள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட பயன்படுத்தப்படும் பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் கொரோனா உள்ளதா என பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும் RT-PCR டெஸ்ட் கிட் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படும் என்றும் இன்று நடைபெற்ற 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜிஎஸ்டி சிகிச்சைக்கான செலவு குறையும் என்றும், பொதுமக்கள் பலன் அடைவார்கள் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை பரிசீலித்த பிறகு, ஜிஎஸ்டி கவுன்சில் இந்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கான செலவு மிகவும் அதிகமாக இருக்கிறது என்றும்ம், சாமானிய மக்களால் இத்தகைய செலவை சமாளிக்க முடியாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 43வது கூட்டத்தில் இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. அமைச்சர்கள் குழு ஒன்று அமைத்து இந்த கோரிக்கைகளை விரிவாக அலச வேண்டும் எனவும், அந்த அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைகள் வழங்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படியே அமைச்சர்கள் குழு அளித்த பரிசீலனைகள் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களுக்கு வரி குறைப்பை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த சலுகைகள் செப்டம்பர் மாத இறுதி வரை அமலில் இருக்கும் என ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டு, இந்த வரியின் அளவு குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்துள்ளது. ஆனால், கொரோனா தடுப்பூசிகள் மீதான வரியை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கவில்லை. எனவே, தடுப்பூசிகளுக்கான 5% வரி அப்படியே நீடிக்கும்.

கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருந்துகள் மற்றும் கருவிகள் மீதான ஜிஎஸ்டி வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டுள்ள பட்டியல் தவிர, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மருத்துவ பொருட்கள் துறை பரிந்துரை செய்யும் மருந்துகள் நீதான வழியையும் 5 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்ற கருவிகள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Tocilizumab மற்றும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி ஆகிய மருந்துகளுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உடல் வெப்பநிலையை சோதிக்க பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தர்மாமீட்டர் போன்ற கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கைகளை தொற்றிலிருந்து காக்க பயன்படுத்தப்படும் ஹேண்ட் சானிடைசர் இதேபோன்ற வரிச்சலுகைகள் விலை குறையும்.

தகன கூடங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் எரியூட்டிகளுக்கும் ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமாக இருந்ததால் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் விரைந்து அதன் காரணமாக தகன கூடங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்ட சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் காரணமாக கொரோனா சிகிச்சை செலவு குறைந்து பொதுமக்களுக்கு பயன் கிட்டும் என்றும், அதே சமயத்தில் பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்து வரும் நிலையில், இந்த சலுகைகள் காரணமாக ஏற்படும் வரி இழப்பு போதும் முடக்கம் படிப்படியாக முடிவுக்கு வருவதால் சரிகட்டப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் கருதுகிறது. ஏற்கெனவே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உறுதியின் அடிப்படையில், ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்தால், அதை மத்திய அரசு நஷ்டஈடு அளித்தது சரிகட்டும் என பிரிவு செய்யப்பட்டிருப்பதால், அதற்கான கூடுதல் வரியை தொடர்ந்து வசூலிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!