இந்தியா

மம்தா தேசிய தலைவராக விரும்புகிறார். ஆனால் அவர் முதலில் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.. மத்திய அமைச்சர் கிண்டல்

42views

மம்தா பானர்ஜி ஒரு தேசிய தலைவராக விரும்புகிறார். ஆனால் அவர் முதலில் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று மேற்கு வங்கம் கொல்கத்தா சென்று இருந்தார். அங்கு ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் பதற்றமாக உள்ளார். மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால் முதலமைச்சராக இருக்க முடியாது என்று அவர் கூறினார். இடைத்தேர்தல் ஏன் நடக்கிறது? அவர் நந்திகிராமில் சுவேந்து ஆதிகாரியிடம் எதிர்த்து தோற்றதால்தான்.

அவர் எரிபொருள் (பெட்ரோல், டீசல்) விலை பற்றி கேட்கிறார். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி. வரம்பில் இருந்து விலக்க முடிவு செய்ததை மம்தா அறிந்திருக்க வேண்டும். மத்திய அரசு லிட்டருக்கு (எரிபொருள் விற்பனையில்) ரூ.32 மட்டுமே எடுக்கிறது. ஆனால் மாநில அரசு 40 சதவீதம் வாட் வரி வசூலிக்கிறது. கடந்த ஜூலை முதல் மேற்கு வங்க அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.51 உயர்த்தியுள்ளது. அவர்கள் அதிலிருந்து வருவாய் ஈட்ட விரும்புகிறார்கள்.

அவர் ஒரு தேசிய தலைவராக விரும்புகிறார். ஆனால் அவர் முதலில் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும். மேலும், காங்கிரசோ அல்லது மற்றவர்களோ அவருடைய (மம்தா பானர்ஜி) தலைமையை ஏற்கிறார்களா என்று காலம் சொல்லும். பிரியங்கா ஜி ஒரு சிறந்த வேட்பாளர். நான் ஒரு பா.ஜ.க. காரியகர்த்தாவாக இங்கு வந்துள்ளேன். இந்த ஒரு நாட்டில், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று போட்டியிடலாம்,எங்கும் பிரச்சாரம் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!