செய்திகள்விளையாட்டு

மன ஆரோக்கியம் மிக முக்கியம், மைதானத்தை விட்டால் விடுதி என்ற நிலை திணறடிக்கிறது: விராட் கோலி ஆதங்கம்

61views

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி மற்றும் இங்கிலாந்து தொடருக்கு இந்திய அணி புறப்பட்டு சென்றது. ஐசிசி போட்டி அட்டவணையோ வீரர்களை வைத்து சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது, ஓய்வு ஒழிச்சல் இல்லாத கிரிக்கெட் என்றால் மூச்சு விடுவதற்கு எங்கு இடம் என்று கேட்கிறார் விராட் கோலி.

ஐபிஎல் பயோ பபுளை விடுத்து இப்போது இங்கிலாந்தில் பயோ பபுள், இதில் காலந்தள்ளுவது சாதாரணமல்ல. இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், பிறகு ஒன்றரை மாத இடைவெளியில் இங்கிலாந்துடன் 5 டெஸ்ட்கள் பிறகு ஐபிஎல் தொடரின் மீதி போட்டிகள், பிறகு டி20 உலகக்கோப்பை என்று கடுமையாக வீரர்கள் வாட்டப்படுகின்றனர். இந்நிலையில் வீரர்கள் தங்கள் கஷ்டங்களை வெளிப்படுத்த ஒரு இடம் தேவை, ஒரு வெளி தேவை என்று வலியுறுத்துகிறார் விராட் கோலி. ‘கிரிக்கெட் அட்டவணை பெரும் போராட்டக் களமாக இருக்கிறது. நீண்ட காலமாகவே நெருக்கமான போட்டிகள், இடைவெளி குறைவான நிலையில் போட்டிகள் என்பது வீரர்களின் மனநிலையை சரியாக வைத்துக் கொள்வதில் பெரும் சவாலாகவே உள்ளது. இதோடு சர்வதேச கிரிக்கெட்டின் உயர் அழுத்த சூழ்நிலைகளும் நெருக்குகின்றன.

எனவே எதிர்காலத்தில் பணிச்சுமையோடு, மன ஆரோக்கியம் என்பதைப் பேணும் முக்கியத்துவமும் எதிர்காலத்தில் அவசியம் நோக்க வேண்டிய அம்சமாகும்.

இன்றைய உலகில் வீரர்களுக்கு ஒரு அவுட்லெட்டே இல்லை. மைதானத்தில் ஆடுவது, பயிற்சி, விட்டால் நேராக விடுதி. ஆட்டத்திலிருந்து அவசியான துண்டிப்புக்கான இடமே இல்லாமல் போய் விட்டது. ஹாயாக ஒரு நடையோ, ரிலாக்ஸாக ஒரு காஃபி அருந்தும் பழக்கமோ இல்லாமலே போய்விடும் போலிருக்கிறது. நான் கொஞ்சம் ஆட்டத்திலிருந்து விலகி வேறு ஏதாவது செய்வோம், கொஞ்சம் புத்துணர்வு பெறுவோம் என்பதற்கான ஒரு வெளியே இல்லாமல் போய்விட்டது. இது மிகப்பெரிய ஒரு விஷயம், இதைப் புறக்கணிக்க முடியாது.

இந்த அணியை உருவாக்க கடினமாக உழைக்கிறோம். அதற்காக வீரர்கள் மன அழுத்தத்தினால் வீழ்ச்சியடைவதையோ, தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல் போவதையோ நாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது

இங்கிலாந்தில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இதற்கு அடுத்து 5 டெஸ்ட் போட்டி, இதற்கு இடையில் உள்ள இடைவெளியை வரவேற்கிறோம், எங்களை கொஞ்சம் துண்டித்துக் கொண்டு பிறகு கிரிக்கெட்டை நோக்கி ஒருங்கிணைய இந்த இடைவெளி முக்கியம் ஆகவே இதனை வரவேற்கிறேன்’ என்று கூறுகிறார் விராட் கோலி.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!