ஆன்மிகம்ஆன்மீக கதைகள்

“மன்னித்தல்” என்பது இறைவனின் அகராதியில் இருக்கிறதா?

367views
“மன்னித்தல்” என்பது இறைவனின் அகராதியிலேயே கிடையாது என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
“கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்
 கசிந்து உருகி நில்லாப்பிழையும்
 நினையாப்பிழையும் நின்ஐந்தெழத்தை சொல்லாப் பிழையும்
 துதியாப்பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே”
-பட்டினத்தார்
இந்த பாடலை நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி பாடி இருப்போம். அதுவும் பக்தி மனநிலையில் பாடி இருப்போம்.
ஆனால் ஒருநாள் ஈஸ்வரன் என்னை பார்த்து திட்டுவது போல் உணர்ந்தேன்.
ஈஸ்வரன் கேட்கிறார் :-
நான் ஏன் கல்லா பிழையை பொருத்துக்கனும் ?
நீ உண்மையையும், நீதியையும், ஆன்மாவை பற்றியும் கற்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் உன்னை பூமிக்கே அனுப்பினேன்.
நீ என்னடான்னா இங்கு வந்து ஒழுங்காக குருவை நாடி தீட்சை பெறாமல் கல்வியும் கற்காமல் என் கோவிலுக்கு வந்து
“கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் … பொருத்து அருள்வாய்”
என்று பிரார்த்தனை செய்கிறாய்.
ஒரு உண்மையை சொல்கிறேன் : –
தானமும், தவமும், பூமியில் மட்டும்தான் செய்யமுடியும்.
பூமியில் வாழும் காலத்தில் நீ தானம், தர்மம், தவம், செய்யாமல் வாழ்ந்து இறந்த பிறகு சூட்சும தேகத்தில் இருக்கும்போது “தானம், தர்மம்” செய்யவேண்டும் கடவுளே என்று என்னிடம் பிரார்த்தனை செய்தால்;
நான் என்ன சொல்வேன்;
* அதற்கு தானே உனக்கு “ஸ்தூல தேகம்” கொடுத்து பூமிக்கு அனுப்பினேன்.*
நீ என்ன என்றால் அங்கு ஒழுங்கா எதையும் கற்காமல், தானமும், தவமும் செய்யாமல் வாழ்ந்துவிட்டு இப்பவந்து கேட்கிற.
சரி என்ன பன்றது மறுபடியும் பூமியில் போய் பிறந்து முறையாக குருவை நாடி தீட்சை பெற்றும் கல்வி கற்றும், தானம் தவமும் செய்து வாழ்ந்துவிட்டு வா என்றுதான் சொல்வேன்.
மேல் உலக வாழ்கை என்பது பூலோக வாழ்க்கையின் போது செய்த தானம், தவம், மற்றும் பெற்ற ஞானம் போன்றவற்றிற்கான பலனை அனுபவிக்கிற வாழ்கை ஆகும்.
“பதவி பூர்வ புண்ணியானாம்”
ஒம் ஜெய் குருவே துணை
  • ‘அன்பே சிவம்’ சரஸ்வதி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!