செய்திகள்தமிழகம்

மதுரை ஆம்னி பஸ் நிலையத்தில் பூ மார்க்கெட்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

141views

மதுரை பூ மார்க்கெட் மாட்டுத் தாவணி ஆம்னி பஸ் நிலை யத்தில் இன்று முதல் செயல்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரி வித்தார்.

கரோனா முழு ஊரடங்கால் பூக்களை விற்க முடியாமல் சிரமப் படுவதாக விவசாயிகள் அமைச்சர் பி.மூர்த்தியிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஒத்தக்கடை வேளாண் கல்லூரி, மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையம், சர்வேயர் காலனி 120 அடி சாலை உள்ளிட்ட இடங்களை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். மாவ ட்டக் கண்காணிடங்ப்பு அலுவலர் சந்திரமோகன், ஆட்சியர் அனீஷ்சேகர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:

ஊரகு முடியும் வரை பூ மார்க்கெட் மொத்த வணிகம் மட்டும் ஆம்னி பேருந்து நிலையத்தில் நாளை (இன்று) முதல் நடக்கும். கரோனா தொற்று குறைந்து வருவது ஆறுதலாக உள்ளது. மாவட்டத்தில் 100 மினி கரோனா சேவை மையங்கள் பாரபட்சமின்றி அமைக்கப்பட்டுள்ளன. கிராமங் களில் வீடு வீடாக நடத்தப்படும் காய்ச்சல் பரிசோதனை மக் களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. விரைவில் கரோனா இல்லாத மாவட்டமாக மதுரை மாறும் என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!