செய்திகள்தமிழகம்

மணிப்பூர் ஆளுநராக நியமனம்: சங்கரமடத்தின் பீடாதிபதி விஜயேந்திரரிடம் ஆசிபெற்ற இல.கணேசன்

82views

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன், காஞ்சிபுரம் வருகை தந்து சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மணிப்பூர் ஆளுநராக நியமித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் பதவியேற்புக்கு முன்பாக காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரரை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் இல.கணேசன். ஆசி பெற்றபோது, அவருடன் அவரின் சகோதரர் இல.கோபாலன் உடன் வந்திருந்தார். ஆசி பெற்ற பிறகு கோரிக்கை மணிமண்டபத்தில் உள்ள மகா பெரியவரின் மூலஸ்தானத்திற்கு சென்று தரிசனம் செய்தார் அவர்.

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரர் சுவாமிகளிடம் ஆசி பெற வந்த இல.கணேசனை, சுவாமிகள் ‘மனித நேயமிக்க மணிப்பூர் ஆளுநரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்’ என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!