உலகளவில் பல நாடுகளில் தங்கள் தாங்கள் சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று வேலைப்பார்த்தும் வசித்தும் வருகின்றனர். அவ்வாறான சமூகத்தினரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி மகிழ்ச்சியாக வேலைப்பார்ப்பதற்கும் நிரந்தரமாக வசிப்பதற்கும் சிறந்த நாடு என்பன பட்டியலிடப்பட்டது. அந்த வகையில் மகிழ்ச்சியாக வேலைப்பார்ப்பதற்கு சிறந்த நாடு பட்டியலில் முதலிடத்தில் தாய்வான் உள்ளது.
தாய்வான் குறித்த கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் பார்க்கும் வேலை மகிழ்ச்சி தருவதாக கூறியுள்ளனர். 74 சதவீதம் பேர் வேலை – வாழ்க்கை சமநிலை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் அங்குள்ள விலைவாசி குறித்து 78 சதவிதம் பேரும், மருத்துவ சிகிச்சை தரம் குறித்து 96% பேரும் மகிழ்ச்சி என கூறியிருக்கிறார்கள். 80% பொதுவாக வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் 62% பேர் அந்நாட்டில் நண்பர்களை உருவாக்கிக்கொள்வது எளிது என கூறியுள்ளனர்.
மகிழ்ச்சியாக வேலைப்பார்ப்பதற்கும் வசிப்பதற்கும் சிறந்த 10 நாடுகளின் பட்டியல்
1. தாய்வான்
2. மெக்சிகோ
3. கோஸ்டாரிகா
4. மலேசியா
5. போர்த்துகல்
6. நியூசிலாந்து
7. அவுஸ்திரேலியா
8. ஈக்வடார்
9. கனடா
10. வியட்நாம்




