மேற்குவங்கம் மாநிலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளைப் பிரதமர் மோடி ஆய்வு செய்த பின், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை.
ஒடிசாவில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தபின் மேற்குவங்கம் சென்ற பிரதமரை முறைப்படி, மம்தா பானர்ஜி வரவேற்கச் செல்லவில்லை. ஆளுநர் ஜப்தீப் தங்கர் மட்டுமே விமான நிலையத்திற்குச் சென்று பிரதமரை வரவேற்றார்.
அதன்பின், மேற்குவங்கத்தில் ஏற்பட்ட புயல் சேதங்கள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். இதன் பின் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டது மம்தாவிற்கு கோவத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரை மணி நேரம் தாமதமாகக் கூட்டம் நடந்த இடத்தில் உள்ளே நுழைந்த மம்தா, பிரதமரிடம் சில மனுக்களைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
இது குறித்து பாஜக தலைவர் ஜே.பி நட்டா “மம்தா பானர்ஜியின் நடவடிக்கை மே.வங்க மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த மம்தா, புயல் சேதங்கள் குறித்துப் பார்வையிடச் சென்றதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார்.