இந்தியா

புதுவை ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தல் இடபங்கீடில் இழுபறி: ஆளுநருடன் முதல்வர் திடீர் சந்திப்பு

45views

புதுச்சேரியில் ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தல் இட பங்கீடு சுமூகமாக முடியாத சூழலில் ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார்.

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள் ளதால் கூட்டணி, இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அமைந்த கூட்டணியே தொடரும் என்று ஆளும்கட்சி தரப்பும், எதிர்க்கட்சித் தரப்பும் தெரிவித்தன.

அதில் இட பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவரும், முதல் வருமான ரங்கசாமி தலைமையில் நடந்து முடிந்துள்ளது. இதில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.

இதுபற்றி ஆளுங்கட்சி வட்டாரங் களில் விசாரித்தபோது, ‘புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலை போன்றே இடபங்கீடு இருக்க ரங்கசாமி விரும்புகிறார். அதாவது 60 சதவீத இடங்களை கோருகிறார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சிகளில் என்ஆர் காங்கிரஸ் 3 கேட்கிறது. மீதமுள்ள இரு நகராட்சிகளை பாஜகவும், அதிமுகவும் பிரித்துக்கொள்ள கோருகிறது. புதுச்சேரி நகராட்சியில் போட்டியிட அதிமுகவும், பாஜகவும் விரும்புகின்றன. அதனால் நகராட்சிகள் பங்கீடு நிறைவடையவில்லை.

மாநிலம் முழுவதும் மொத்தம் 10 கொம்யூன் பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் என்ஆர் காங்கிரஸ் 5-ல் போட்டியிட திட்டமிடுகிறது. மீதமுள்ள 5-ஐ மற்ற இரு கட்சிகளும் பிரித்துக்கொள்ள கோருகின்றன. நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் ஒதுக்கப்படும் கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் வகையில் அங்குள்ள கவுன்சிலர்களில் 60 சதவீத கவுன்சிலர் பதவிகளை அந்த கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும், மீதமுள்ள 40 சதவீத இடங்களை மற்ற கட்சிகள் தலா 20 சதவீதம் பிரித்துக்கொள்ளவும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் எதிலும் முடிவு ஏற்படவில்லை’ என்று குறிப்பிடுகின்றனர்.

பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படா ததையடுத்து பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கட்சி மேலிடத்துக்கு தகவல் அளித்தார்.

இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி நேற்று திடீரென்று ராஜ்நிவாஸ் சென்று ஆளுநர் தமிழிசையை சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது. வழக்கம்போல் முதல்வர் ரங்கசாமி பதில் ஏதும் கூறாமல் சென்றார். இதுதொடர்பாக பாஜக வட்டாரங் களில் விசாரித்தபோது, ‘மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இன்று புதுச்சேரிக்கு வருகிறார். 30-ம் தேதியன்று காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியநகராட்சிகளுக்கு வேட்புமனு தாக்கல்தொடங்குவதால் அன்றைய தினம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடக்கும். இக்கூட்டத்தில் இடபங்கீடு இறுதியாக வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிடுகின்றனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!