இந்தியா

புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை

52views

எதிர்காலத்தில் கொரோனாவை எந்த சூழ்நிலையிலும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.தென்னிந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் தற்போதைய நிலை மற்றும் தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் காணொலி மூலம் நடந்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், காணொலி மூலம் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் கொரோனாவின் தற்போதைய நிலை, அதனை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து விளக்கினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், ‘புதுச்சேரியில் இதுவரை 21 லட்சத்து 48 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நிலையில் 14 ஆயிரத்து 293 போர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தில், மொத்தம் 1,945 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், 1,464 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 171 வென்டிலேட்டர் படுக்கைகளும் உள்ளன. இவற்றில் 1,730 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், 1,301 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 125 வென்டிலேட்டர் படுக்கைகளும் தற்போது காலியாக உள்ளன.மாநிலத்தில் இதுவரை, 88 சதவீதத்தினருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 60 சதவீதத்தினருக்கு இரு தவணை தடுப்பூசியும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களில் 51 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 6,728 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதுமான எண்ணிக்கையில் உள்ளது’ என்றார். கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!