செய்திகள்விளையாட்டு

“புதிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறேன்”- பி.வி.சிந்து பேட்டி.!!!

103views

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சார்பில் பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார்.

பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சார்பில் பி.வி. சிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதாக வீராங்கனை பி.வி. சிந்து பேட்டி ஒன்றில் கூறும்போது, ” பேட்மிண்டனில்’ டாப் 10′ -ல் உள்ள வீராங்கனைகள் அனைவருமே ஒரே மாதிரியான தரத்தை உடையவர்கள். ஒரு வீராங்கனை போட்டியிலிருந்து( நடப்பு சாம்பியன் கரோலினா மரின் விலகல் ) விலகினார் என்பதற்காக அதனை சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது.

அதுவும் முக்கியமாக ராட்சனோக் போன்ற திறமையான சில வீராங்கனைகளும் உள்ளனர்.

இதனால் அவர்களை கவனத்தில் கொண்டு போட்டியில் செயல்படவேண்டும். கொரோனா தொற்று பாதிப்பால் கிடைத்திருக்கும் இந்த இடைவெளி நல்ல திறமையையும் ,புதிய ஆட்ட நுணுக்கத்தையும் மேம்படுத்துவதற்கு கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பாகும். இதனால் கிடைத்திருக்கும் இந்த நல்ல சமயத்தை பயன்படுத்தி புதிய நுணுக்கத்தையும், திறனையும் கற்றுக்கொண்டு வருகிறேன்”, என்று அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!