பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்பமண்டல புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. நிலச்சரி மற்றும் வெள்ளத்தினால் குறைந்தது 138 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்ப மண்டலப் புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. கேபிஸ், அக்லான், ஆண்டிக் மற்றும் இலோய்லோ மாகாணங்களில் 159 பகுதிகளில் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 13ம் தேதி) வெப்பமண்டலப் புயல் தாக்கியது. மெகி என்று பெயரிடப்பட்ட இந்த புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள் வெள்ளம் மற்றும் மோசமான நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் இதுவரை 101 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேபே நகர அரசு தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸை தாக்கிய வெப்பமண்டல புயல் மெகிக்கு பலியானோர் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.