மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உத்தரப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடன்களையும் மற்றும் விஷ்வகர்மா ஷ்ரம் சம்மன் யோஜனா திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மொத்த உலகமும் கொரோனா பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் 40 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசத்துக்கு திரும்பினர்.
இந்த காலகட்டத்தில் பாரம்பரிய கைவினைஞர்கள், பிற கைவினை கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் இணைந்து ஒரு தற்சாற்பு திட்டத்தை உருவாக்கினர். இது பிரதமர் கூறிய தற்சாற்பு இந்தியா கொள்கை அடிப்படையிலானது.
உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகை 24 கோடி, ஆனால் வேலைவாய்ப்பின்மை விகிதம் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உத்தரப்பிரதேசத்தில் மிகவும் குறைவு.
திருவிழாவுக்கு சென்றுவிட்டு தாயுடன் நடந்து சென்ற 19வயது பெண்ணை நாசம் செய்த கும்பல்
2016ம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 17%க்கும் அதிகமாக இருந்தது, ஆனால் தற்போது அது 4% முதல் 5%க்குள் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபோட்சவ் உற்சவத்தன்று அயோத்தியில் 7.5 லட்சம் விளக்குகள் ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த விளக்குகள் அனைத்தும் அயோத்தியிலேயே தயாரிக்கப்படும்.
பிரதமர் மோட் அக்டோபர் 6ம் தேதியன்று முதல்வராகவும், பிரதமராகவும் 20 ஆண்டுகள் பொதுசேவையை நிறைவு செய்ய உள்ளார்.
கேரளாவில் கல்லூரிகளில் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு இழுக்க முயற்சி – ஆளும் கட்சி பகீர் தகவல்
பிரதமர் மோடி தனது தலைமைப் பண்பினால் புதிய பாதையை நாட்டுக்கு காட்டியிருக்கிறார். மற்றும் அவரது பொது சேவையை உத்தரபிரதேச அரசு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7 வரை விகாஸ் உத்சவ் வடிவத்தில் நினைவுகூர்கிறது.” இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.