அடுத்ததாக பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தில் ராஷ் கண்ணா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அடுத்ததாக அவர் ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ராஷி கண்ணாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் ‘இமைக்காநொடிகள்’ படம் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா.
அதை தொடர்ந்து அடங்கமற், அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் சுந்தர். சி-யின் அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி போன்ற படங்களில் நடிப்பதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அவர் தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்தி, மலையாளம், தெலுங்கு என பிறமொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். விரைவில் நாக் அஸ்வின் படம் உறுதியாகும் பட்சத்தில் ராஷி கண்ணா தன்னுடைய முன்னணி இடத்தை கோலிவுட் சினிமாவில் உறுதி செய்துவிடுவார் என்றே சொல்லப்படுகிறது.