தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் டூயட் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான வர் பிரகாஷ்ராஜ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் கடந்த 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது பிரகாஷ்ராஜ் மற்றும் லலிதாகுமாரி தம்பதி பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு 2010ஆம் ஆண்டு போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
அவர்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினர். இதனை முன்னிட்டு தனது மனைவிக்கு நன்றி தெரிவித்த பிரகாஷ்ராஜ், தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து, இன்று இரவு நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். என் மகன் வேதந்த் எங்கள் திருமணத்தை பார்க்க விரும்பியதால் அவன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.