உலகம்

பின்விளைவை சந்திக்க நேரிடும்: பிரிட்டன் எச்சரிக்கை ரஷ்யாவுக்கு

68views

“உக்ரைன் நாட்டை கைப்பற்ற முயற்சித்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என, ரஷ்யாவை, பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் எச்சரித்துளார்.ஐரோப்பிய நாடான உக்ரைனில் உள்ள கிரீமியா பகுதியை 2014ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது.

அதைத்தொடர்ந்து ரஷ்யா மீது சில பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இந்நிலையில் உக்ரைன் நாட்டை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் எல்லைப் பகுதியில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா நிலை நிறுத்தி உள்ளது.உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே எச்சரித்துள்ளன.இந்நிலையில் ஜி – 7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனின் லிவர்பூல் நகரில் நடந்த இந்த மாநாட்டில் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் பேசும்போது, ரஷ்யாவை கடுமையாக எச்சரித்தார். அப்போது அவர் கூறியதாவது: உக்ரைன் நாட்டிற்குள் படையெடுத்து, அதை ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சித்தால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்; தக்க பதிலடி கொடுக்கப்படும்.ரஷ்யாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. எனவே ரஷ்யா தன் நிலையில் இருந்து பின் வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!