விளையாட்டு

பிஎஸ்பிபி கேரம் விளையாட்டு போட்டிகள்: ஐஓசிஎல் அணி சாம்பியன் பட்டம் வென்றது

75views

பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் (பிஎஸ்பிபி) 28-வது பதிப்பு கேரம் விளையாட்டு தொடர், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) சார்பில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது.

கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தன.

இதில் நாடுமுழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஓஎன்ஜிசி வீராங்கனைராஷ்மி குமாரி முதலிடம் பிடித்தார். துபா சாஹர் 2-வது இடத்தையும் (ஐஒசிஎல்), காஜல் குமாரி (ஐஒசிஎல்) 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் னிவாஸ் (ஐஓசிஎல்) முதலிடம் பிடித்தார். இதே நிறுவனத்தை சேர்ந்த முகமது குஃப்ரான் 2-வதுஇடத்தையும், ரமேஷ் பாபு 3-வதுஇடத்தையும் பிடித்தனர். இரட்டையர் பிரிவில் ஐஓசிஎல் அணியைச் சேர்ந்த காஜல் குமாரி, துபா சாஹர்ஜோடி முதலிடம் பிடித்தது. ஓஎன்ஜிசி அணியைச் சேர்ந்த ராஷ்மி குமாரி, இளவழகி ஜோடி 2-வதுஇடத்தை பிடித்தது. ஆடவர் இரட்டையர் பிரிவில் ஐஓசிஎல் அணியைச் சேர்ந்த ரமேஷ்பாபு, யோகேஷ் பர்தேஷி ஜோடி முதலிடத்தையும், இதே நிறுவனத்தைச் சேர்ந்த னிவாஸ், முகமது குஃப்ரான் ஜோடி 2-வது இடத்தையும் பிடித்தன.

ஆடவருக்கான அணிகள் பிரிவில் ஐஓசிஎல் நிறுவனத்தின் னிவாஸ், முகமது குஃப்ரான், யோகேஷ் பர்தேஷி, ரமேஷ் பாபு ஆகியோரை உள்ளடக்கிய அணி முதலிடம் பிடித்தது. 2-வது இடத்தை ஓஎன்ஜிசி அணியும், 3-வது இடத்தை ஹெச்பிசிஎல் அணியும் கைப்பற்றின. மகளிருக்கான அணிகள் பிரிவில் ஐஓசிஎல் நிறுவனத்தின் காஜல் குமாரி, பரிமளா தேவி, ஜெய, துபா சாஹர் ஆகியோரை உள்ளடக்கிய அணி முதலிடம் பிடித்தது. 2-வது இடத்தை ஓஎன்ஜிசி அணியும், 3-வது இடத்தை இஐஎல் அணி யும் பிடித்தன.

மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனையாக துபா சாஹரும் (ஐஓசிஎல்), தொடரின் சிறந்த வீராங்கனையாக ராஷ்மி குமாரியும் (ஓஎன்ஜிசி) தேர்வானார்கள். ஆடவர் பிரிவில் சிறந்த வீரராக யோகேஷ் பர்தேஷி (ஐஓசிஎல்), தொடரின் சிறந்த வீரராக னிவாஸ்(ஐஓசிஎல்) தேர்வு செய்யப்பட் டனர். ஒட்டுமொத்தமாக ஐஓசிஎல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2-ம் இடத்தை ஓஎன்ஜிசி பிடித்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் சிபிசிஎல் நிர்வாக இயக்குநர் அர்விந்த் குமார் மற்றும் இயக்குநர்கள் ராஜீவ் அய்லவாடி, கிருஷ்ணன், சங்கர், கே.ரமேஷ் (சிஜிஎம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!