இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பென் பட்டேல் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதல் சுற்றின் இரண்டாவது போட்டியில் பிரிட்டன் வீராங்கனை மேகனை 3 – 1 என்ற சேட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
முதல் சுற்றின் முதல் போட்டியில் அவர் சீன வீராங்கனை Zhou Ying தோல்வியை தழுவினார். இருப்பினும் முதல் சுற்றில் இரண்டாம் இடம் பிடித்ததால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச அளவில் பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பட்டியலில் எட்டாவது இடத்தில் அவர் உள்ளார். இதற்கு முன்னதாக 2017 ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் மற்றும் 2011 தாய்லாந்து டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளியும் அவர் வென்றுள்ளார்.