ஸ்ரீநகர் – ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவைக்கு தங்கள் வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்றிருந்த போது Go First நிறுவனத்தின் ஸ்ரீநகர் – ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவையை தொடங்கி வைத்தார். அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை இந்த விமானம் பாகிஸ்தான் வழியே சென்று ஷார்ஜாவை அடைந்தது. ஆனால் அதன் பின்னர் தங்கள் வான் வழியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதனால் பயண நேரம் அதிகமாவதோடு, கட்டணம் மற்றும் எரிபொருள் தேவை அதிகரிக்கும் என விமான நிறுவனம் கூறுகிறது. ஏற்கனவே 2009ஆம் ஆண்டு இதே போல ஸ்ரீநகர் – துபாய் இடையிலான நேரடி விமான சேவை பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்த தடை விதித்ததால் நிறுத்தி வைக்கப்பட்டது.