செய்திகள்தமிழகம்

பழங்குடி மக்களுக்காக பாடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் காலமானார்

144views

பழங்குடி மக்களுக்காக பாடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி(84) காலாமானார். எல்கர் பரிஷத் வழக்கில் தலேஜா சிறையில் இருந்தவர் உடல்நலக்குறைவினால் காலமானார்.தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 83 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டேன் சாமி கடந்த 2020ம் ஆண்டு என்ஐஏ மூலம் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டார். 2018ல் பீமா – கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளது. அதோடு மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு இவர் சேவை செய்து வந்த போது தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் திடீரென கைது செய்யப்பட்டார். இவர் என்ஐஏ நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறார். இவர் இரண்டு முறை பெயில் மனு தாக்கல் செய்தும் கூட என்ஐஏ கோர்ட் இவரின் பெயில் மனுவை நிராகரித்துவிட்டது. பர்கின்ஸன் நோய் உட்பட பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளால் இவர் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு பர்கின்சன் காரணமாக ஏற்பட்ட கை நடுக்கம் காரணமாக தண்ணீர் குடிக்க வசதியாக ஸ்டிரா கேட்டதற்கே என்ஐஏ அமைப்பு இவருக்கு சின்ன ஸ்டிரா வழங்காமல் பல மாதங்கள் இழுத்தடித்தது.

இந்த நிலையில் ஸ்டேன் சுவாமிக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டித்திருந்தது. மேலும் ஐநாவின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவினர் மேரி லார் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் ஸ்டேன் சுவாமிக்கு உடனே சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.ஸ்டே சுவாமியின் உடல்நிலை மிகவும் மோசமானது அடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக செய்திகள் வெளியானதை கேட்டு மேரி லாலர் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஸ்டேன் சுவாமி மரணமடைந்தார். அவர் சிறையிலேயே உடல்நலக்குறைவினால் மரணம் அடைந்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!