விளையாட்டு

பறிபோகும் ஒருநாள் கேப்டன் பதவி..? கோலிக்கு டெஸ்ட் மட்டும் போதும். அதிரடி முடிவை கையில் எடுத்த பிசிசிஐ!!

59views

இந்திய அணியின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தார். 3 பிரிவுகளுக்கும் அவர் கேப்டனாக செயல்படுவது, அவரது பேட்டிங்கிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது.

அதற்கேற்றவாறே, அவரது ஆட்டமும் சொதப்பலானதாகவே இருந்தது. இதனால், கடும் விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு டி20 இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரும், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அசத்தினார். இதனிடையே, ஒமிக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவையே நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னாப்ரிக்க கிரிக்கெட் தொடர் தள்ளிப்போன நிலையில், அதற்கு முன்னதாக, புதிய கேப்டன் பற்றிய அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.

தற்போது கேப்டனாக இருக்கும் விராட் கோலியை டெஸ்ட்டுக்கு மட்டும் கேப்டனாக தொடர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!