பஞ்சாபில் 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 20-ம் நாள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.
இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ஆகியோர் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர்.
பாஜக 65 தொகுதிகளிலும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், சிரோமணி அகாலிதளம் சன்யுக்த் பிரிவு 15 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்போது பேசிய ஜே.பி.நட்டா, நாட்டின் பாதுகாப்பிலும், உணவுப் பாதுகாப்பிலும் பஞ்சாப் முன்னணியில் உள்ளதாகத் தெரிவித்தார்.