தமிழகம்

நெகிழ்ச்சி! மரணப்படுக்கையில் இருந்த தாய்க்காக பாட்டு பாடிய மகன்!!

72views

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த தாய்க்காக அவரது மகன் செல்போனில் வீடியோ கால் மூலம் பாட்டு பாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த கொரோனா காலத்தில் இறந்தவரின் முகத்தை கூட உறவினர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வைரஸ் என்று பேராபத்தால் இறுதி சடங்குகளை கூட செய்ய முடியவில்லை. அந்தவகையில் தான் இறக்கும் தருவாயில் இருந்த தனது தாயை செல்போன் வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார் அவரது மகன்.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த சங்கமித்ரா சாட்டர்ஜி (70) என்பவர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும் , அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தது .
ஒருகட்டத்தில் , அவர் இறந்துவிடுவார் என்பதை அறிந்த மருத்துவர்கள் , யாருடனாவது பேச விருப்பமா எனக் கேட்டுள்ளனர் . அதற்கு , தனது மகன் சோஹம் சாட்டர்ஜியுடன் பேச விரும்புவதாக அவர் கூறினார் .
இதையடுத்து , சோஹம் சாட்டர்ஜியை வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்ட மருத்துவர்கள் , அவரது தாயாரின் நிலையை எடுத்துக்கூறி , மகிழ்ச்சியாக ஏதேனும் பேசுங்கள் எனக் கூறினர் . பின்னர் தாயும் , மகனும் சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர் .
செல்போனில் மகனை பார்த்த மகிழ்ச்சியில் பேசிய சங்கமித்ரா , தனக்காக ஒரு பாடல் பாடுமாறு கேட்டுள்ளார் . இதனைத் தொடர்ந்து , அவரது மகனும் பழைய இந்தி பாடல் ஒன்றை பாடினார் . அதனை உணர்ச்சி ததும்ப கேட்டுக் கொண்டிருந்த சங்கமித்ரா , சிறிது நேரத்தில் உயிரிழந்தார் .
இந்த வீடியோ காட்சியை அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதற்கு லட்சக்கணக்கானோர் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர் .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!