செய்திகள்தமிழகம்

நான்கு மாதத்திற்கு பிறகு ஆய்வுக்கூட்டம்… முல்லை பெரியார் அணையில் ஐவர் குழு ஆய்வு…

46views

முல்லைப்பெரியாறு அணையில் ஐந்து பேர் கொண்ட துணைக் கண்காணிப்பு குழுவின் ஆய்வு நடைபெற்றது. துணைக் குழுவின் தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், தமிழக அரசு பிரதிநிதிகளான தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம் இர்வின் மற்றும் கேரள அரசு பிரதிநிதிகளான கேரள நீர்பாசனத்துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் பங்கேற்றனர்.

பருவமழை காலம் முடியவுள்ள நிலையில் பிரதான அணை, பேபி அணை, அணை மதகுகள் ஆகியன இதில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அணை நீர்மட்டம், மழைப்பதிவு, நீர் வெளியேற்றம், நீர்வரத்து, அணையின் கசிவு நீர்வரத்து குறித்து ஆய்வு செய்தனர். ஆய்விற்கு பின், மூவர் கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஐவர் குழுவின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி துணைக் கண்காணிப்பு குழுவின் ஆய்வு நடைபெற்றது. இதனையடுத்து முல்லை பெரியாறு 18- ஆம் கால்வாய் மற்றும் தந்தை பெரியாறு வாய்க்காலில் ஆட்சியர் முரளிதரன் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!