நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை விகிதமானது, பிப்ரவரி மத்தியில் இருந்து 12 வாரங்களாக ஏறுமுகம் கண்டு 2.3 மடங்கு உயர்ந்தது. இதில் 10 வாரங்கள் பாதிப்பு விகிதம் ஏறுமுகத்தில் சென்றது. இப்போது 2 வாரங்களாக இறங்குமுகம் கண்டு வருகிறது.
கடந்த மாதம் 29-ந் தேதி நிலவரப்படி, பாதிப்புவிகிதம் குறைவாக இருப்பதாக 210 மாவட்டங்கள் கூறின. ஆனால் மே 13-19 தேதிகளில் இந்த எண்ணிக்கை 303 மாவட்டங்களாக அதிகரித்துள்ளன. 7 மாநிலங்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிப்பு விகிதம் உள்ளது. 22 மாநிலங்களில் 15 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு விகிதம் இருக்கிறது.
50 சதவீத மக்கள் இப்போதும் முக கவசம் அணிவதில்லை என்றும், 64 சதவீதம்பேர் வாயையும், மூக்கையும் மறைக்கிறவிதமாக முக கவசம் அணிவதில்லை என்றும் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கவசம், முக கவசம் அணிவதும், அந்த முக கவசம் மூக்கையும், வாயையும் மறைக்கிற விதத்தில் இருக்க வேண்டும் என்பதுவும் தான்.