தமிழகம்

நாகூர் தர்காவில் கொடியேற்றத்துடன் துவங்கிய 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா

47views

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

புகழ்பெற்ற இஸ்லாமிய வழிபாட்டு தலமான நாகூர் தர்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரிவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

கந்தூரி விழாவின் கொடியேற்றத்திற்காக வருடந்தோறும் பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடி சிங்கப்பூரிலிருந்து நாகைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் நாகையிலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக நாகூர் வந்தடைந்தது.

ஆண்டவரின் பாடலை தாஹிரா இசையுடன் இசைத்து வந்த பக்கீர்மார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கொடியை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கொடிக்கு துஆ ஓதப்பட்டு வானவேடிக்கை முழங்க நாகூர் ஆண்டவர் தர்காவிலுள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது. கந்தூரி விழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நாகூர் ஆண்டவரை வணங்கினர்.

இதைத் தொடர்ந்து நாகூர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத்-எனும் சந்தனக்கூடு விழா வரும் 13 ஆம் தேதி நாகையிலிருந்து புறப்பட்டு 14ஆம் தேதி அதிகாலை நாகூர் தர்கா வந்தடையும். அதன் பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!