வந்தே பாரத் ரயிலுக்கான 24 ஆயிரம் கோடி ரூபாய் டென்டரை ரயில்வே அமைச்சகம் இம்மாதமே வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிதாக 200 வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்காக இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 24,000 கோடி ரூபாய்க்கான டெண்டரை ரயில்வே அமைச்சகம் மாதம் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட புதிதாக 200 வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
மேலும் இதற்கு முன் இருக்கை வசதிகள் கொண்ட 102 வந்தே பாரத் ரயில் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் படுக்கை வசதியுடன் ரயில்களை உற்பத்தி ரயில்வே முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 44 ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை ஐசிஎஃப் நிறுவனத்திற்கு ரயில்வேதுறை வழங்கியுள்ளது. இதன்படி சென்னை ஐசிஎப் உள்ளிட்ட ஆலைகளில் புதிய வந்தே பாரத் ரயில்கள் உற்பத்தியாக இருக்கின்றன.
இப்புதிய ரயில்களில் பல்வேறு நவீன வசதிகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் நெடுந்தூர இரவு பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ரயிலிலும் 16 பெட்டிகள் இருக்கும். ஒரு ரயிலின் விலை 120 கோடி ரூபாய். பல்வேறு புதிய வசதிகள் நவீன தொழில்நுட்பத்துடன் இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.