உலகம்

நம்பிக்கை ஓட்டெடுப்பில் நேபாள பிரதமர்சர்மா ஒலி தோல்வி

68views

நேபாள பார்லிமென்ட்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் சர்மாஒலி தோல்வி அடைந்தார். அண்டை நாடான நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பலத்த போட்டி நிலவியுள்ளதையடுத்து கடும் அரசியல்குழப்பங்கள், நெருக்கடி நிலவி வருகிறது. பிரதமர் சர்மாஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் தமால் பிரசந்தா இடையே கடந்தாண்டு மோதல் ஏற்பட்டது.

மோதலை முடிவுக்கு கொண்டு வர பார்லி.,யை கலைக்கும் படி, பிரதமர் சர்மாஒலி, கடந்தாண்டு டிசம்பரில் அதிபருக்கு பரிந்துரைத்தார். அதை, அந்த நாட்டின் அதிபர் பித்யா தேவிபண்டாரி ஏற்றார்.  பிரதமரின் இந்த முடிவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதற்கிடையே, அரசியல் குழப்பம் அதிகரித்து வரும் நிலையில், அதிபர் பித்யா தேவிபண்டாரி ஆலோசனையை ஏற்று பிரதமர், கே.பி.சர்மாஒலி, மே, 10ம் தேதி பார்லி.,யில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து இன்று (மே.10)  நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. ஓட்டெடுப்பில் பங்கேற்ற 232 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் 93 பேர் பிரதமர் சர்மாஒலிக்கு ஆதரவாகவும், 124 உறுப்பினர்கள் எதிராகவும் ஓட்டளித்தனர்.  15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

இதனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவின்றி நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் சர்மாஒலி தோல்வியுற்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!