சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக பிரபலங்கள் மீது இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பலர் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை தமிழக காவல் கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்ட ஒருவர் நடிகர் அஜித்குமார் வீட்டிலும், சென்னை ஆட்சியர் அலுவலகத்திலும் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக தெரிவித்து தொலைபேசி அழைப்பினை துண்டித்துள்ளார்.
இது சம்பந்தமாக அங்கிருக்கும் நமது செய்திளார் தெரிவிக்கையில் சம்பந்தபட்ட அலுவலகம் மற்றும் அஜித்குமார் வீடு உள்ள பகுதிகளின் பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உடன் நடிகர் அஜித்குமார், ஆட்சியர் அலுவலகங்களில் தேடுதல் நடடிவடிக்களை மேற்கொண்ட பொலிசார் இது புரளி என்று கண்டுபிடித்துள்ளனர்.
இது சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ள நபரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த புரளி காரணமாக குறிப்பிட்ட பிரதேசங்களில் பெரும் பதற்றம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.