தோனி எனக்கு கொடுத்த மாபெறும் வாய்ப்பு! 13 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த தினேஷ் கார்த்திக்!
இந்தியாவுக்காக சர்வதேச அளவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியவர் தினேஷ் கார்த்திக். சில டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடியிருக்கிறார். இருப்பினும் அவர் மகேந்திர சிங் தோனியின் சம அளவு காலத்தில் விளையாடிய காரணத்தினால் அவளுக்கான வாய்ப்பு அவ்வளவாக கிடைக்கப்பெறவில்லை. அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு விளையாடும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார்.
தற்போது இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்வதில் பிசியாக இருக்கிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகளுக்கு கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக செயல்பட்டு வரும் அவர் சமீபத்தில் ஒரு உரையாடலில் ராகுல் டிராவிட் மற்றும் மகேந்திர சிங் தோனி எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்கியதாக கூறியுள்ளார்.
ராகுல் டிராவிட் என்னிடம் கூறிய வார்த்தைகள்
மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு முன்னதாக எனக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவர் அந்தப் பணியில் அமர்ந்த பின்னர் எனக்கு அந்த இடத்தில் விளையாடும் வாய்ப்பு வழங்க பெறவில்லை. அப்போது ராகுல் டிராவிட் என்னிடம் உன்னிடம் இருக்கும் திறமையை முழுவதுமாக இருக்க வேண்டும். அரை குறையாக இருப்பது எந்த விதத்திலும் பயனளிக்காது என்றும் இந்த இடத்தில் இறங்கி விளையாடினாலும் அந்த இடத்தில் நம்முடைய முழுப் பங்களிப்பை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
அதை நான் ஏற்றுக் கொண்டு டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் நிறைய விளையாடினேன். குறிப்பாக ஓபனிங் இடத்தில் நிறைய விளையாடிய காரணத்தினால் எனக்கு நிறைய இடம் கிடைத்தது. அதன் பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் என்னை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ராகுல் டிராவிட் தன்னிடம் அறிவுரை கூறியதாக தினேஷ் கார்த்திக் உரையாடலில் கூறியுள்ளார்.
மகேந்திர சிங் தோனி என் மீது வைத்த நம்பிக்கை
2007ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது மகேந்திர சிங் தோனி என்னை ஒப்பனிங் இடத்தில் விளையாட சொன்னார். அந்த தொடரில் நான் ஓப்பனிங் ஆர்டரில் களம் இறங்கி 263 ரன்கள் அடித்தேன் அந்தத் தொடரிலேயே அதிகபட்ச ரன்கள் அடித்த வீரராக வலம் வந்தேன். இவ்வாறு எனது கேரியரில் ஒரு முக்கிய திருப்புமுனையை மகேந்திர சிங் தோனி ஏற்படுத்திக் கொடுத்தார் என்று தினேஷ் கார்த்திக் தற்பொழுது கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப்படுவதாக தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.