விளையாட்டு

துணைக்கேப்டனாக தினேஷ் கார்த்திக்?.. ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் யார் தெரியுமா?.. இறுதி முடிவு

42views

ஆர்சிபி அணியின் புதிய கேப்டனை நியமிப்பதில் இறுதி முடிவுக்கு வந்துள்ளது நிர்வாகம்.

ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல் உள்ள ஆர்சிபி அணி இந்தாண்டு முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதால், புதிய கேப்டனை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அதன்படி அணியின் கேப்டன்சி தேர்வுக்கு முதன்மை தேர்வாக இருப்பது ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தான். சர்வதேச அளவில் அதிக அனுபவம் கொண்டவர் மற்றும் கேப்டன்சி திறமைகளும் உள்ளது. இது ஒருபுறம் இருக்க மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸை ரூ. 7 கோடிக்கும், தினேஷ் கார்த்திக்கை ரூ. 5.50 கோடிக்கும் வாங்கி குழப்பத்தை உண்டாக்கியது.

இவர்கள் மூன்று பேருமே கேப்டன்சிக்கு தகுதியானவர்கள். ஆனால் வயதை பார்க்கும் போது டூப்ளசிஸ், தினேஷ் கார்திக்கை விட க்ளென் மேக்ஸ்வெல் நீண்ட வருடங்களுக்கு பயன்படுவார். மேலும் ஏற்கனவே ஆர்சிபி அணியுடன் நன்கு பொருந்திவிட்டார் என்பதால் அணி வீரர்களை சுலபமாக வேலை வாங்க முடியும் எனக்கருதப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்கள் யோசனைக்கு பிறகு திடீரென டூப்ளசிஸையே கேப்டனாக அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

க்ளென் மேக்ஸ்வெல்லால் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாது. ஆனால் டூப்ளசிஸ் அப்படி இல்லை. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிவிட்டதால் அனைத்துப்போட்டிகளிலும் பங்கேற்க முடியும். இதுமட்டுமல்லாமல் அவர் சர்வதேச அளவில் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்திய அனுபவங்கள் உள்ளன.

ஐபிஎல் தொடரில் தோனிக்கே பல முறை டூப்ளசிஸ் தான் டிப்ஸ்கள் கொடுப்பார் என சிஎஸ்கே அணி நிர்வாகமே தெரிவித்திருந்தன. எனவே அவரை கேப்டனாக நியமித்தால், அனைத்து அணிகளையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும். இதே போல துணைக்கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டால், ஸ்டம்பிற்கு பின் நின்று ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!