தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் ‘மோசம்’ பிரிவில் நீடித்து வருகிறது.
இது குறித்து தில்லி காற்றின் தரத்தை கணித்து வரும் சஃபா் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் உள்ளது. ‘மோசம்’ பிரிவில் நீடிக்கும் காற்றின் தரக் குறியீடு 232 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
தில்லி பல்கலைக்கழகம், லோதி சாலை, நொய்டா, மதுரா சாலை மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (டெர்மினல்-3) உள்ளிட்ட தில்லியின் பல பகுதிகள் காற்றின் தரம் தொடர்ந்து ‘மோசம்’ பிரிவில் உள்ளது. காலை 8 மணி நிலவரப்படி, தில்லி பல்கலைக்கழகம், லோதி சாலை, நொய்டா, மதுரா ஆகிய பகுதிகளில் முறையே, 273, 201, 208, 262, 249 எனப் பதிவாகி உள்ளது.
காற்றில் இருக்கும் நுண்ணிய துகள்களின் அளவுகளான பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 முறையே 100 மற்றும் 203 ஆக பதிவாகி உள்ளது.