சிறுகதை

தாய்மை…

347views

தாய்மை…

 

…….காலை முதல் இரவு 10 மணிவரை சுறுசுறுப்பாய் இயங்கும் ஆரீஷ்மால்….

நகரின் மைய பகுதியில் இருப்பதால் கூட்டத்திற்கு குறைவில்லை.

அந்த மாலில் இருக்கும் காய்கறி செக்க்ஷனில் வழக்கம் போல் சிரித்த முகத்தோடு பில் போடும் வித்யாவின் கண்களில் சோகம்…

வழக்கமாக காய்கறி வாங்கும் ரோஹினி காய்கறி டிரேயை டேபிள் மேல் வைக்க….

நிமிர்ந்து பார்க்காமல் தப்பு ம் தவறு மாக பில் போட ஹாய் வித்யா ஏன் டென்சன் என ரோஹினி கேட்க

சாரி மேடம் குழந்தை க்கு உடம்பு சரியில்ல …

ஓ…டாக்டர் கிட்ட போனீயா…

நைட் போயி ஊசி போட்டு மாத்திரை கொடுத்து ம் குறையல…

அவரும் ஊர் ல இல்ல பக்கத்து வீட்ல

குழந்தை ய விட்டுட்டு வந்தேன்..

லீவு போடலயா…

காலைல மேனேஜருக்கு போன் பண்ணேன் …போன் ரீச்சால சரி நேர் ல சொல்ல வந்தேன்… மீட்டிங்ல இருக்கார்
என்று பில் லையும்போட்டுக்கொண்டு

வாசலையும் பார்க்க

மேனேஜர் தலை தெரியவும் ஓடினாள்..

மீட்டிங்கில் நிறைய வாங்கி கட்டி கொண்டு வந்தது கொளுந்து விட்டு எரிந்த அவர் கண்களில் தெரிய

…வித்யா விபரம் சொல்லி லீவ் கேட்க

கியூவ பாத்திங்கள்ள

இப்படி பாதில போனா யார் பில் போடறது…எல்லா கேபினும் பிஸியா இருக்கே…

வேறு ஆள் இருந்தா உங்க பொறுப்புல பாக்க சொல்லிட்டு போங்க…

என்னால இதான் செய்ய முடியும்னு

போனை எடுத்து யாரையோ டோஸ் விட்டு கொண்டே சென்று விட்டார்..

வித்யா செய்வது அறியாமல் நின்றாள்

மீண்டும் கம்ப்யூட்டர் அருகே வந்ததும்தான் தெரிந்தது..ரோஹினி பில் கிழிக்க படாமல் இருந்தது

சாரி மேடம் என்று சொல்லி நிமிர்ந்தவள்..மேடம் உங்களுக்கு பில் போட தெரியுமா…

வங்கியில் வேலை பார்த்த ரோஹினி

தன் குழந்தை நோய் வாய்பட்ட நாட்களில் இதே போல ஒரு சூழலில் வேலையை விட்டவள்தான்…

கொஞ்சம் நேரம் பாத்துக்கோங்க

நான் வீட்டிற்கு போய் குழந்தையை இங்கே தூக்கிட்டு வந்து பாத்துக்கிறேன் ப்ளீஸ் மேம் என கெஞ்ச..

இதுக்கு ரூல் ஒத்துக்குமா என ரோஹினி கேட்க.. மேனேஜர் அனுமதி அளித்ததாக சொல்ல..

வேலை பற்றிய விபரங்கள் கேட்ட பின்

வித்யா நீ சாயங்காலம் வந்தா போதும்

நான் பாத்துக்கிறேன்…

என்று சொன்னாள்…

ரோஹினியின் தாய்மை உணர்வு… அவளை உதவ வைத்தது…

நம்மை சுற்றி நிறைய வித்யாக்கள்..

என்னால் முடிந்த அளவு சில வித்யாக்களுக்கு உதவி இருக்கிறேன்..

 

  • எழுதியவர் : விஜி ஆர் கிருஷ்ணன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!