தமிழகம்

தலைவர்களின் சொத்து மதிப்பு

197views

சென்னை: அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபோது தலைவர்கள் தங்களது சொத்து மதிப்பையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவில் 2016-ல் ரூ.3.14 கோடியாக இருந்த அசையும் சொத்து, 2021ல் ரூ.2.01 கோடியாக குறைந்துள்ளது எனவும், அதேபோல், 2016-ல் ரூ.4.66 கோடியாக இருந்த அசையா சொத்து 2021ல் ரூ. 4.68 கோடியாக உள்ளது.. மேலும், 2016-ல் ரூ.33 லட்சமாக இருந்த கடன் தற்போது ரூ.29.75 லட்சமாக குறைந்துள்ளதாக வெளியிட்டுள்ளார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்

துணை முதல்வரும், அ.தி.மு.க, ஒருங்கிணைப்பாளருமான ஒ. பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அவரது அசையும் சொத்து 2016ல் ரூ.55 லட்சமாக இருந்தது. தற்போது ரூ.5.19 கோடியாக உள்ளது. அதேபோல், 2016ல் ரூ.98 லட்சமாக இருந்த அசையா சொத்தின் மதிப்பு இப்போது ரூ.2.64 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், அவருக்கு பூர்வீக சொத்து, நிலங்கள் எதுவும் இல்லை எனவும், தனது மனைவி பெயரில் ரூ.10.06 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.. வேட்புமனுவில் தனது அசையும், அசையா சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளார்.

அதில்,தன் மீது 45 வழக்குகள் பதிவாகியுள்ளது எனவும் ரூ. 6.11 கோடி அசையும், அசையா சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இவற்றில், 2016-ல் ரூ.1 கோடியே 11 லட்சத்து 59 ஆயிரத்து 079 ஆக இருந்த அசையும் சொத்து 2021-ல் ரூ. 5 கோடியே 25 லட்சத்து 37 ஆயிரத்து 646 கோடியாக உயர்ந்துள்ளது. 2016-ல் ரூ. 4.72 கோடியாக இருந்த அசையா சொத்து, 2021-ல் ரூ.4.94 கோடியாக உள்ளது. தனது மனைவி துர்காவுக்கு ரூ. 53 லட்சத்தில் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள பிராமணப்பத்திரத்தில் 45 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்து இருப்பதாகவும் 131கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மொத்த சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய உள்ளது.

கடன் 50 கோடி ரூபாய்க்கு உள்ளது. 2 கோடி மதிப்புள்ள லெக்சஸ் மாடல் காரும், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபுள்யூ காரும் உள்ளது. லண்டனில் 2 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!